இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் வானகம்

15 June 2012

“வானகம்” ( நம்மாழ்வார் ) பண்ணையில் 
நிரந்தர இயற்கை வேளாண்மை பயிற்சி தொடக்கம்
Photo: நம்மாழ்வார் பண்ணையில் நிரந்தர இயற்கை வேளாண்மை பயிற்சி தொடக்கம்

கரூர் மாவட்டம் கடவூரில் உள்ள நம்மாழ்வார் உயிர்ச் சூழல் நடுவமான “வானகம்” பண்ணையில் நபார்டு வங்கியின் நிதி உதவியுடன் நிரந்தர வேளாண்மை - இயற்கை வேளாண்மை குறித்த ஐந்து நாள் பயிற்சி முகாமை  இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் இன்று தொடங்கி வைத்தார். 

தொடக்க விழாவிற்கு நபார்டு வங்கியின் துணை மேலாளர் அ.பார்த்திபன் தலைமை வகித்தார். இந்தியன் ஓவர் சீஸ் வங்கியின் ஊரகத் தொழில் முனைவோர் பயிற்சி மையத்தின் இயக்குநர் க.சந்திரசேகரன் முன்னிலை வகித்தார். 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்வத்துடன் பங்கு கொண்டனர். வந்தவர்களை வானகத்தின் அறங்காவலர் ஏங்கல்சு ராசா வரவேற்றார். மேலாளர் பார்த்திபன் இப்பயிற்சியினைப் பெறுகின்ற அனைவரும் நிரந்தர இயற்கை வேளாண்மையை தாங்களும் பின்பற்றி மற்ற வேளாண்குடி மக்களுக்கும் எடுத்துரைக்க வேண்டும். நஞ்சில்லா உணவு தமிழ் நாட்டில் மட்டும் இன்றி இந்தியாவிற்கும் வழங்க வேண்டும் என்றார். 

இயக்குநர் சந்திரசேகரன் இது போன்ற பயிற்சிகள் அனைத்து மாவட்டங்களிலும் தொடங்க வேண்டும் என்று வாழ்த்தினார். 

பயிற்சியினை தொடங்கி வைத்த நம்மாழ்வார் “ஊதியம் பெறுபவர்களுக்கு ஓய்வு உண்டு, மண்வெட்டி பிடித்து உழைப்பவனுக்கு ஓய்வு என்பதே இல்லை. மண்ணை மலடாக்கி விட்டு விளைச்சல் இல்லை என்று புலம்புகிறோம். எப்படி இந்த மண் மலடானது? நம்மைச் சுற்றி இருக்கும் காற்றில் 78% நைட்ரஜன் இருக்கிறது.  நைட்ரஜனுக்காக  மண்ணில் போடும் யூரியாவில் 46% தான் உள்ளது. மீதி 54% வெறும் உப்பு தான். யூரியா யூரியா என்று மண்ணில் போட்டு மண்ணை மலடாக்கி விட்டோம். பசுமை புரட்சி பொய்த்து விட்டது என்பதை அனைவரும் இன்று உணர்ந்து உள்ளார்கள். இந்நிலையை மாற்ற முடியுமா? முடியும்.  நமக்காக நைட்ரஜனை காற்றில் இருந்து எடுத்து மண்ணில் வேர் முடிச்சுகள் மூலமாக நிலை நிறுத்த கொளுஞ்சி, உரக்கொன்றை, உளுந்து, சோயா பீன்ஸ், தட்டபயறு, அகத்தி, செம்பை போன்ற தாவரங்கள் இயற்கை நமக்கு கொடுத்த கொடையாகும்.  நுண்ணுயிரிகளை பெருக்க வேண்டும், அதற்கு மூடாக்கும் கால் நடைகளும் அவசியமாகின்றன.

பூமித் தாய் வளமாக இருந்தால் அதன் பிள்ளைகளான பயிர்களும் செழிப்பாக ஆரோக்கியமாக இருக்கும். அதே போன்று பயிரில் ஏதேனும் நோய் ஏற்பட்டால் அது நிலத்தின் குறைபாடு என்று அறிந்து இயற்கை சுழற்சியை உணர்ந்து தாயை சரி செய்ய வேண்டும். இயற்கை அன்னையை பராமரிப்போம் இயற்கை அன்னை நம்மை பராமரிப்பாள்” என்று முழக்கமிட்டார். 

இப்பயிற்சி மாணவர்கள் தாங்கள் முகாமில் கலந்து கொள்ளும் நோக்கத்தை விவரித்தனர். தொடக்க விழாவின் ஒருங்கிணைப்பாளர் செந்தில் கணேசன் நன்றியுரையாற்றினார்.

No comments:

Post a Comment