இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் வானகம்

28 October 2013

வானகத்தில் ” கற்றலும் கேட்டலும் “
-----------------------------------------
நம்மாழ்வார் ஐயாவுடன் சமூக பணியாற்ற...

( தன்னார்வலராக விடுமுறை நாட்களிலும் கூட சேவை செய்யலாம். மேலும் படிக்க வசதியில்லாதவர்களுக்கு கூட வானகம் வாழ்வியல் கல்வி அளிக்க தயாராக உள்ளது. தொண்டு செய்ய வருபவர்களுக்கு தங்குமிடமும், உணவும் வழங்குகிறோம்.)

" வானகம்

" ஒரு 48 ஏக்கரைக் கொண்ட எதற்கும் உதவாத நிலம் என பலராலும் கைவிடப்பட்ட வறண்ட நிலப்பரப்பாகும். அப்படிப்பட்ட நிலப்பரப்பை தன் வாழ்நாள் அனுபவம் முழுவதையுமே பயன்படுத்தி கடந்த 4 ஆண்டுகளில் விளையும் நிலமாக மாற்றி அதை அனைவருக்கும் கற்றுக் கொடுக்கும் பொறுப்பை சமூக நலன் கொண்டு கற்றுக் கொடுக்கிறார் “நம்மாழ்வார் ஐயா” அவர்கள் .
அவர்களின் நோக்கம் நீடித்த சுய சார்பு வேளாண்மையை அனைவருக்கும் கற்றுக் கொடுத்து நோயால் வாடும் சமூகத்தையும், சமூக பொறுப்பு கொண்ட இளைஞர்களை நல்வழிப்படுத்தி அதன் மூலம் சிதைந்த இயற்கையை உயிர்பிக்கவும் அரும்பாடு பட்டுவருகிறார்.

அதற்குத் துணையாக இன்று பல கணிப்பொறித் துறையில் பணி புரிந்துவரும் பொறியாளர்களும், தன் வாழ்க்கையில் நிம்மதியற்ற நிலையில் வாழும் இளைய சமூகத்தினரும் , பணி ஓய்வு பெற்றவர்களும், பல மருத்துவர்களும் கூட வானகத்தில் தங்கி பயிற்சி பெற்று தன் வாழ்க்கையை மட்டுமல்ல, தன் சுற்றத்தாரின் வாழ்க்கையையும் மேம்படுத்திவருகின்றனர்.


" இப்படிப்பட்ட சூழ்நிலையில் வானகம் மேலும் பல விரிவுபடுத்தப் பட்ட ஆராய்ச்சிகளையும், சமூகப் பணிகளையும் கையில் எடுத்து தொண்டாற்ற முனைப்புடன் உள்ளது. இந்ததருணத்தில் எங்களுடன் இணைய நீங்களும் தயாரா?.. "

அதற்கு உங்களுக்கு கிடைக்கும் விடுமுறை நாட்களாக இருக்கட்டும் அல்லது நீங்கள் நினைத்தால் வானகத்திலே தங்கியும் தன்னார்வமாக தொண்டாற்றலாம்.
மேலும் நீங்கள் இயற்கை வேளாண் ஆலோசகராக வேண்டுமெனில் குறைந்தது ஆறு மாத காலம் தங்கி உங்கள் அனுபவத்தை வளர்த்துக் கொண்டும் ஆலோசகராக மாறலாம்.

" மேலும் படிக்க வசதியில்லாதவர்களுக்கு கூட வானகம் வாழ்வியல் கல்வி அளிக்க தயாராக உள்ளது. தொண்டு செய்ய வருபவர்களுக்கு தங்குமிடமும், உணவும் வழங்குகிறோம். "

" தொண்டுள்ளம் கொண்டவர்கள் தன்னார்வலர்களுக்கான உணவு அளிக்கும் செலவையோ அல்லது பொருள்களையோ அளித்து உதவலாம்."

மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள் : 98431 27804 , 94435 75431.

No comments:

Post a Comment