இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் வானகம்

12 April 2012



                                         இயற்கை வாழ்வியல் பயிற்சி


                                     
               
                       கரூர் மாவட்டம் கடவூரில் அமைந்திருக்கும் பண்ணை ஆராய்ச்சி மற்றும் உலக உணவுப் பாதுகாப்பிற்கான நம்மாழ்வார் உயிர் சூழல் நடுவமான " வானகம் இயற்கை வேளாண்   பண்ணையில் வருகிற ஏப்ரல் மாதம் 21.4.2012  மற்றும்  22.4.2012     ஆகிய   நாட்களில்   இயற்கை வாழ்வியல் பயிற்சி  நடைபெறுகிறது. .இந்தப் பயிற்சியில் உழவில்லாத வேளாண்மை, மருந்து இல்லாத மருத்துவம் குறித்த பயிற்சி & கலைந்துரையாடல் நடைபெறும்.   செய்முறைப் பயிற்சி, பார்த்துணர்தல் மூலம் பயிற்சி நடைபெறும்.
இந்த களப்பயிற்சியை " இயற்கை ஞானி நம்மாழ்வார் "  அவர்கள் தலைமை ஏற்று நடத்துகிறார்.
  
எங்கல்ஸ் ராஜா ந்த பயிற்சியை வழி நடத்துவதோடு பயிற்சியும் அளிக்கிறார்.
             
 பயிற்சிக் கட்டணம் ரூபாய் 500 மட்டும்.
    பயிற்சி கட்டணத்தை செலுத்த வேண்டிய மணி ஆர்டர் முகவரி :
   M. செந்தில் கணேசன்
  வானகம் (
நம்மாழ்வார் உயிர் சூழல் நடுவம்) ,
   சுருமான் பட்டி, கடவூர் அஞ்சல், கரூர் மாவட்டம் - 621 311

(  குறிப்பு : ஏப்ரல் 17ம் தேதிக்குள் மணி ஆர்டரை அனுப்பும்படி  கேட்டுக்கொள்கிறோம். )

தங்குமிடம், உணவு   இலவசம்.
முன்பதிவு  அவசியம் . மேலும் விவரங்களுக்கு
   தொலைபேசி எண் :  97860 71727, 9952324855
 

இயற்கை பயிர் செய்யும் நாமெல்லாம் அதன் பிள்ளைகளாகவே இருப்போம்.

மருந்தே இல்லாத உடல் நலம் 
மருத்துவமே தேவை இல்லாத மனித குலம்.








சுனாமியிலிருந்து மீள

                      இயற்கையை நாகரீக மனிதர்கள்.....  சீரழிக்கப்பட்ட தன் விளைவால் இயற்கை சீற்றங்கள் (சுனாமி) எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்கிற சூழ்நிலையிருப்பதால் கடற்கரை பகுதிகளில் செய்ய வேண்டியவை ?

1. இயற்கை ஆற்றலைப் பயன்படுத்தி மணலின் 

மூலம் மதில் சுவர் எழுப்பப் பட்டு, அதன் மேல் பனைமட்டைகளை வெட்டி அதன் அடிமட்டை கீழும் பனை ஓலை மேலும் வரும் படி நட வேண்டும். இதனால் கடலிலிருந்து காற்று வீசும் போது மணலானது பனைமட்டையின் உள்பக்கத்தில் படிந்துவிடும். அதே காற்று மீண்டும் கடலை நோக்கி திரும்பி செல்லும் போது பனைமட்டையானது மண் அரிப்பு ஏற்படாமல் தடுத்து நிறுத்திவிடும்.

2. பின்னர் மதில் சுவரின் மேல் பனை கொட்டைகளைப் பயன்படுத்தி  பனைமரங்களை  வளர்ப்போமானால் சுனாமி போன்ற இயற்கை சீற்றங்களிலிருந்து கடற்கரை பகுதிகளை காப்பற்றிக் கொள்ள முடியும்.

இது 2004-ல் சுனாமி வந்தபோது நிருபிக்கப்பட்டுள்ளது .


நாகப் பட்டினம் மாவட்டம் பொய்கை நல்லூரில்  சுனாமி பாதிப்பு ஏற்படவில்லை. ஏனென்றால் அங்கு மணலின் மூலம் மதில் சுவர் (மணற்குன்றுகள் (beach sand dunes) ) எழுப்பப் பட்டுயிருந்தது.

இதே போல் மதில் சுவர் எழுப்பப்பட்ட பல பகுதிகளிலும் சுனாமி பாதிப்பு ஏற்படவில்லை. மேலும் கடற்கரை ஓரம் இருந்த தென்னை உள்ளிட்ட பெரிய மரங்கள் எல்லாம்கூட வேரோடு பெயர்ந்து வீழ்ந்துபோயின. ஆனால், ஒரு பனை மரம்கூட விழவில்லை.