இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் வானகம்

1 March 2012

ஏன் மாற வேண்டும் இயற்கை விவசாயத்திற்கு?

 பரிணாம வளர்ச்சி பெற்ற ஆதி மனிதன் காடுகளில் அலைந்து திரிந்து உணவு சேகரித்தான்.தீயின் பயன்பாட்டை கண்டுபிடித்த பின்னர்,அவன் பக்குவப்படுத்தப்பட்ட உணவை உண்ண தொடங்கினான்.தனக்கு வேண்டிய உணவை தானே பயிரிட்டு கொள்ள,குழுவாக இனைந்து செழுமையான நதியோரங்களை தனக்குரியதாக ஆக்கி கொண்டான்.இப்படிதான் நாகரீகம் மேம்பட்டது.விவசாயம் மனிதனின் முதல் தொழில் ஆனது.ஆதியிலிருந்த மனிதன் இயற்கையோடு இணைந்து பயிர் செய்தான்.இயற்கை தனக்களித்ததை பயன்படுத்தி கொண்டு அதற்கே திருப்பி அளித்தான்.இந்தியாவில்  விவசாயம் :


      என்ன இல்லை இந்த திருநாட்டில் ? என்று எல்லோரும் புகழும் பெருமையை பெற்றது நம் இந்திய வள நாடு.சரித்திரத்தின் பெரும் தேடல்கள் எல்லாம் இந்தியாவின் செல்வத்தை நோக்கியே தொடங்கப்பட்டுள்ளது.பண்டைய தமிழக மக்கள் நிலத்தின் பயன்பாடு கருதி அவற்றை குறிஞ்சி,முல்லை, மருதம்,நெய்தல்,பாலை என்று பிரித்துள்ளனர்.வயலும் வயல் சார்ந்த பகுதிகளையும் உடையது மருத நிலம்.மாடு செல்வமாக கருதப்பட்டுள்ளது.ஆவும் மாந்தரும் இணைந்தே வாழ்தனர்.மனிதன் கால்நடை கழிவுகளில் இருந்து பயிர் செழித்து வளர்வதை கண்டுகொண்டான்.எனவே கால்நடையின் கழிவுகளை நிலத்திற்கும் அதன்  ஏனைய பயன்பாடுகளை தனக்கும் உபயோகித்துகொண்டான்.இயன்றவரை  இயற்கை அன்னையின் கட்டுப்பாடுக்குள்  தன் செயல்களை வரையறுத்து கொண்டான்.

                                     
பசுமை புரட்சியும் அதன் விளைவுகளும் :


காலங்கள் மாறின.நம் நாடு அன்னியருக்கு அடிமைபட்டது.இந்தியாவின் அபரிதமான செல்வத்தை அபகரித்தனர் அன்னியர்.1829 இல் தஞ்சையை பார்வையிட்ட ஒரு ஆங்கிலேயன் சொன்னான் "எனது அனுபவத்தில் நான் தஞ்சையின்  சிறந்த வண்டல் மண் சமமாக எதையும் பார்த்ததில்லை.அது, மற்ற நிலங்களிலும் இரண்டு பெரிய நன்மைகளை கொண்டுள்ளது.அதற்கு  அவர்கள் உரமிடுதல் தேவையில்லை மற்றும் அந்த  நிலம் எக்காலமும் பாழ்படமுடியாது"
நெடிய போராட்டத்தின் இறுதியில் நாம் சுதந்திரம் அடைந்தோம்.உணவு உற்பத்தியில் தன்னிறைவை அடைவதற்காக 1960 களில் "பசுமை புரட்சி " கொண்டு வரப்பட்டது.இதை சாக்கிட்டு கொண்டு மற்ற நாடுகளின் கழிவுகளை நம் தலையில் கட்ட தொடங்கினார்கள்.இரண்டாம் உலக யுத்தத்தில் மிஞ்சிய அமிலங்களை உரம் என்ற பெயரில் இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்தார்கள்.அதிக விளைச்சலுக்கு செயற்கை உரத்தை மண்ணில் கொட்டினோம்.பயிர் விளைந்தது.அபரீதமாக தேவைக்கதிகமாக   விளைந்தது.ஆனால் விஷமாக விளைந்தது.விவசாயி காலம்காலமாக சேர்த்து வைத்த விதைநெல் அவன் கையிலிருந்து ஒரு அயல் நாடு கம்பேனிக்கு கைமாறியது.அந்நியன் நம் நாட்டின் சூழலுக்கு சற்றும் பொருந்தாத மரபணு மாற்றப்பட்ட விதைகளை எல்லாம் நம்மிடம் கொடுத்து சோதித்தான்.விளைவு ,பொருந்தா விவசாய முறையால் நிலம் பாழ் ஆனது.விளைச்சல் குறைய தொடங்கியது.மண்ணை நம்பி வாழ்ந்த விவசாயி தோல்வி அடைந்தான்.வளம் இழந்த மண்ணோடும்,மண்ணுக்கு   பொருந்தாத விதைகளோடும் போரிட்டு தன்னுயிரை இழந்தான்.


நம் நாட்டு சுழலுக்கு ஏற்ப வளரும் மரபு பயிர் வகைகளை நாம் இழந்து வருகிறோம்.மண்ணுக்கும்,மனிதருக்கும் தீங்கு விளைவிக்காத இயற்கை விவசாய முறைகளை நாம் மறந்து வருகிறோம்.ஆனாலும் காலம் கடக்க வில்லை.மனிதரின் பெரும் பிழைகளை இயற்கை அன்னை மன்னிப்பதற்கு,எஞ்சி இருக்கும் நிலங்களை காக்க தொடங்குவோம்.பாழ் நிலத்தையும் பசுமையாக்கும் இயற்கை விவசாயத்திற்கு மாறுவோம்.பெரும் விளைவுகள் சிறு மாற்றங்களில் தான் தொடங்குகிறது.    

2 comments: