இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் வானகம்

13 March 2012







 அருட்பெருஞ்சோதி இயற்கையில் ஆர்வமிக்க அனைவரும்!

இயற்கை வழி வேளாண்மை
சான்றிதழ் படிப்பு

இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் அவர்களின் வழிகாட்டுதலில்
பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஐ.ஈ.சி.டி யில் இயற்கை வழி வேளாண்மை சான்றிதழ் படிப்பாக அறிமுகப்படுத்தப்பட்டு அதன் மாவட்ட வழிகாட்டி மையமாக இயங்கி வரும் கரூர்-அருட்பெருஞ்சோதி கல்வி அறக்கட்டளை மூலமாக நடைபெறுகிறது.

இதுவரை வெவ்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து பயின்ற 60 பேர் பயிற்சி முடித்த நிலையில் தற்போது அடுத்த வகுப்பிற்கான சேர்க்கை தொடங்கி உள்ளது.

ஞாயிறு தோறும் வகுப்பு  நடைபெறும்.
வயது தடை அல்ல
தமிழ் எழுதப் படிக்கத் தெரிய வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.03.2012
கட்டணம் : ரூ.2450/-


தனித் தன்மைகள்

இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வார் அவர்களின் வழிகாட்டுதலுடன் செய்முறைப் பயிற்சி, களஆய்வு, நேரடிஅனுபவம், கல்விச் சுற்றுலா.

வேளாண் துறையில் அனுபவமிக்கவர்கள், சுயதொழில் முனைவோர், இயற்கையை உணர்ந்த ஆன்றோர்கள் அளிக்கும் பயிற்சி.

மண்புழு வளர்ப்பு              - பணிக்கம்பட்டி திரு. கோபாலகிருஷ்ணன்
தேனீ வளர்ப்பு                - திருமதி. ஜோசப்பின்
கால்நடை வளர்ப்பு            - மருத்துவர். காசிபிச்சை
மரம் வளர்ப்பு                 - மரம் தங்கசாமி
மாட்டூட்டம்(பஞ்சகவ்யா)      - மருத்துவர். நடராசன்
ஒருங்கிணைந்த பண்ணையம் - திரு. ஞானப்பிரகாசம்


 நுண்ணுயிர் வளர்ப்பு, நீர்மேலாண்மை, வேளாண்மையின் பிற துறைகளுக்கு உயிர்ச்சூழலியல் வளர்ச்சி  நடுவம் வானகத்தின் பயிற்சியாளர்கள்.

இயற்கை வழி வேளாண்மையின் முன்னோடிகளைப் பற்றியும் இன்றைய உணவு முறையினால் ஏற்படும் தீய விளைவுகள் பற்றியும் கணினி மூலம் துல்லியமாக அறிந்து கொள்ள தகவல் தொழில்  நுட்ப அரங்கில் பயிற்சி.

சுயதொழில் முனைய, வங்க்கிக் கடன் பெற, ஏற்றுமதி செய்ய, விளைபொருட்களை சந்தைப்படுத்த மதிப்புக்கூட்ட வழிகாட்டுதல்.

அருட்பெருஞ்சோதி பசுமை இந்தியா ஆக்ககத்தின்  நஞ்சில்லா விளைபொருட்கள் விற்பனை அங்காடியின் மூலம் சந்தைப்படுத்துதல்.

இங்கு பயிற்சி பெற்ற பலரும் இன்று இயற்கை வேளாண்மையை சிறப்பாக செய்து வருகின்றனர். மேலும் பசுமை விகடன் போன்ற இதழ்களிலும் அவர்களைப் பற்றிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

தொடர்புக்கு:
அருட்டபெருஞ்சோதி கல்வி அறக்கட்டளை, வள்ளலார் கோட்டம்,
வாங்கல் சாலை, கரூர் 639116. அலைபேசி 9244552225.
மின்னஞ்சல்: aefkarur@gmail.com








Click here to Reply or Forward
Ads – Why this ad?
With bright sourcing opportunities, Your time to shine. Register now!

2 comments: