இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் வானகம்

12 April 2012

சுனாமியிலிருந்து மீள

                      இயற்கையை நாகரீக மனிதர்கள்.....  சீரழிக்கப்பட்ட தன் விளைவால் இயற்கை சீற்றங்கள் (சுனாமி) எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்கிற சூழ்நிலையிருப்பதால் கடற்கரை பகுதிகளில் செய்ய வேண்டியவை ?

1. இயற்கை ஆற்றலைப் பயன்படுத்தி மணலின் 

மூலம் மதில் சுவர் எழுப்பப் பட்டு, அதன் மேல் பனைமட்டைகளை வெட்டி அதன் அடிமட்டை கீழும் பனை ஓலை மேலும் வரும் படி நட வேண்டும். இதனால் கடலிலிருந்து காற்று வீசும் போது மணலானது பனைமட்டையின் உள்பக்கத்தில் படிந்துவிடும். அதே காற்று மீண்டும் கடலை நோக்கி திரும்பி செல்லும் போது பனைமட்டையானது மண் அரிப்பு ஏற்படாமல் தடுத்து நிறுத்திவிடும்.

2. பின்னர் மதில் சுவரின் மேல் பனை கொட்டைகளைப் பயன்படுத்தி  பனைமரங்களை  வளர்ப்போமானால் சுனாமி போன்ற இயற்கை சீற்றங்களிலிருந்து கடற்கரை பகுதிகளை காப்பற்றிக் கொள்ள முடியும்.

இது 2004-ல் சுனாமி வந்தபோது நிருபிக்கப்பட்டுள்ளது .


நாகப் பட்டினம் மாவட்டம் பொய்கை நல்லூரில்  சுனாமி பாதிப்பு ஏற்படவில்லை. ஏனென்றால் அங்கு மணலின் மூலம் மதில் சுவர் (மணற்குன்றுகள் (beach sand dunes) ) எழுப்பப் பட்டுயிருந்தது.

இதே போல் மதில் சுவர் எழுப்பப்பட்ட பல பகுதிகளிலும் சுனாமி பாதிப்பு ஏற்படவில்லை. மேலும் கடற்கரை ஓரம் இருந்த தென்னை உள்ளிட்ட பெரிய மரங்கள் எல்லாம்கூட வேரோடு பெயர்ந்து வீழ்ந்துபோயின. ஆனால், ஒரு பனை மரம்கூட விழவில்லை.

No comments:

Post a Comment