பாதிப்புகளை மறைக்கும் மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் !

அனைத்து தாவரங்களுக்கும் மரபணு மாற்றப்படும் ஆபத்து ஏற்படும்.
எனவே, பி.டி. கத்தரி நாட்டில் நுழைவதை மக்களை கடுமையாக எதிர்த்
துப் போராட வேண்டும் என்றார் இயற்கை வேளாண் விஞ்ஞானி
கோ. நம்மாழ்வார்.
த.மு.எச, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் தஞ்சாவூரில்
சனிக்கிழமை (03/04/10) இரவு நடைபெற்ற மக்கள் சந்திப்புக் கூட்டத்
தில், பேராசிரியர் வெ. சுகுமார் எழுதிய மரபணு தொழில்நுட்ப
மும் பி.டி. கத்தரியும் என்ற நூலை வெளியிட்டு அவர் மேலும் பேசியது:
-
வெள்ளம் ஏற்படும் போதெல்லாம் திருவாரூர் மாவட்டத்தில் சுமார் 2
இலட்சம் ஏக்கர் பயிர்கள் மூழ்கி அழிவது வாடிக்கையாக உள்ளது. நான்
சிறுவனாக இருந்தபோது, இப் பகுதியில் மடுவு முழுங்கி, தங்கச்
சம்பா போன்ற நெல் இரகங்கள் இருந்தன. அந்த இரகங்கள் ஒரு ஆளைவிட அதிக
உயரம் வளரும். தண்ணீர் மட்டம் உயர உயர அதுவும் வளரும், கதிரும்
பாதிக்காது.
இதன் மூலம் வைக்கோல் அதிகமாகக் கிடைத்து, அவற்றைத் தின்ற மாடுக
ளின் எண்ணிக்கையும் அதிகமாக இருந்தன. பாலும், இயற்கை உரமும்
அதிகளவில் கிடைத்து, மக்கள் வளமாக இருந்தனர்.
ஆனால், தற்போது பயிர்களின் வளர்ச்சி முக்கால் முழம் அளவிலேயே உள்
ளது. மாடுகளுக்கும் தீனி கிடைக்கவில்லை. இரத்தச் சோகையால் உல
கில் அதிகம் பாதிக்கப்பட்டோர் நமது கிராமங்களில்தான் உள்ளனர்.
இந்தியாவில் மட்டும் 30,000க்கும் மேற்பட்ட நெல் இரகங்கள் இருந்
தன. விவசாயிகள் ஒருவருக்கு ஒருவர் இவற்றைப் பரிமாறிக் கொண்ட
னர். பசுமை புரட்சிக்குப் பின்னர் ஐ.ஆர். 20, ஐ.ஆர். 50 போன்ற 4
நெல் இரகங்கள் தான் இருந்தன. பின்னர் அவையும் காணாமல் போய்விட்
டன.

அன்று விவசாயத்துக்கு வெளியிலிருந்து எந்த முதலீடும் வரவில்லை.
இன்றோ, எல்லாவற்றையும் வெளியிலிருந்தே வாங்குகின்றனர்.
நிலைத்தை விற்றுக் கடனை அடைக்கின்றனர். நிலை கைமீறும்போது தற்கொ
லையும் செய்து கொள்கின்றனர்.

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் 2 இலட்சத்துக்கும்
அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஆசைப்பட்டு

யில், அவர்கள் எடுக்óகும் முடிவால், அவர்களின் குடும்பங்களே
சிதைகின்றன.
விவசாயிகளுக்கு நன்மை செய்வதற்காக பசுமைப் புரட்சி கொண்டு வரப்ப
டவில்லை. 2ஆம் உலகப் போர் நின்ற பின்னர், அதுவரை போரில் பயன்ப
டுத்தப்பட்டு வந்த இரசாயனங்களை, பூச்சிக்கொல்லி என்ற பெயரில்
இந்திய வயல்களில் கொட்டுவதற்காகவே பசுமைப் புரட்சி கொண்டுவ
ரப்பட்டது. இதன் மூலம் அமெரிக்காவின் ஹென்றி போர்டு, இராக்பெல்
லரின் இரசாயன நிறுவனங்கள் கொள்ளை இலாபம் அடைந்தன.
அதேபோலத்தான், தற்போது மரபணு மாற்று கத்தரியை நம் நாட்டில்
நுழைக்கப் பார்க்கின்றனர். அதற்கு கோவை வேளாண் பல்கலைக்கழகம்
போன்றவை துணை போகின்றன.
தமிழகத்தில் ஒவ்வொரு ஊருக்கும் ஒரு கத்தரி வகை உள்ளது. சுவையும்
ஊருக்கு ஏற்ப மாறும். இந்தியாவில் 3,000 வகை கத்தரிகள் உள்ளன.
பி.டி. கத்தரியை அனுமதித்தால் நாட்டில் ஒரு கத்தரி வகை மட்டும்
தான் இருக்கும். நாடு முழுவதும் எதை உற்பத்தி செய்ய வேண்டும்; எதை
உண்ண வேண்டும் என்பதை ஒரு கம்பெனி முடிவு செய்யும் நிலை உருவாகிவி
டும்.

புழுவுக்கு எதிரியாக இருக்கும் பிடி கத்தரி மனிதர்களுக்கும் எதி
ரிதான். இதை உண்டால் புற்று நோய், ஆண், பெண் மலட்டுத் தன்மை போன்
றவை ஏற்படுவதோடு, தாவரங்களின் செல் கட்டமைப்பே குலைந்து
விடும்.
அறிவியல் கண்டுபிப்புகள் எல்லாம் நன்மை செய்யும் என்று ஏமாற வேண்
டாம்; தீமையும் செய்யும். பி.டி. கத்திரியால் விவசாயிகளின்
வறுமை போக்கப்படும் எனக் கூறுகின்றனர். தொழில்நுட்பம் மட்டும்
பட்டினியைப் போக்காது, அரசின் மக்கள் நலன் சார்ந்த கொள்கை
யும், சீரான உற்பத்தி, விநியோகமும்தான் இதைச் சாத்தியப்ப
டுத்தும் என்றார் நம்மாழ்வார்.
கூட்டத்துக்கு தமீம் அன்சாரி தலைமை வகித்தார். ம. சந்திர
மெளலி, வழக்குரைஞர் வெ. ஜீவக்குமார் உள்ளிட்டோர் பேசினர்.
நூலை நம்மாழ்வார் வெளியிட, டெல்டா ரோட்டரி சங்கத் தலைவர் ஏ.
சீனிவாசன் பெற்றுக்கொண்டார். பெ. விஜயகுமார் நன்றி கூறினார்.