இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் வானகம்

3 January 2013

 முன்னோடி சாதனை விவசாயி :

திரு. K.V. செந்தில் குமார் ( கைபேசி : 97882 03694 )
( அடர் நடவு வாழை )

                இராசாயன முறை விவசாய முறையால் பெரிதும் நஷ்டமடைந்தது ஒரு கால கட்டத்தில் இனி நாம் இயற்கை முறையை நாடி சென்றால் மட்டுமே தப்பிக்க முடியும் என்பதை உணர்ந்த திரு. K.V. செந்தில் குமார் அவர்கள்

“ இயற்கை ஞானி நம்மாழ்வார் அவர்களின் எழுத்துக்களாலும் ( புத்தகங்களால் ), வானொலிகளிலும், தொலைகாட்சி பேட்டிகளாலும் பெரிதும் ஈர்க்கப்பட்டு இயற்கை வழி விவசாய முறையை கையாண்டு இராசாயனத்தால் வளமிழந்த தன் நிலத்தை மீண்டும் உயிர்பித்ததுடன், அனைவருக்கும் நஞ்சில்லா உணவை உற்பத்தி செய்து வருகிறார்.
https://www.youtube.com/watch?v=rxsrePPdlqQ

மேலும் உணவு சங்கிலியிலுள்ள அனைத்து உயிர்களும் தான் அனைத்திற்கும் அடிப்படை என்பதை தொடர்ந்து அறிவுறித்திவரும் நம்மாழ்வார் அவர்களின் வாக்கை தன்னுடைய நிலத்தில் மெய்பித்தும் காட்டியுள்ளார்.

இன்றைய சூழலில் அனைவரும் இயற்கையை நோக்கிப் பயனிப்போமானால் விவசாயிகள் மட்டுமில்லாமல் அதை உண்போர்களும் மருத்துவமனை செல்லாமல் " உணவே மருந்து " என்கிற நிலையை அடைய முடியும் எனகிறார்.

இவர் தன்னுடைய நிலத்தில் கற்பூர வல்லி வாழையை அடர் நடவு முறையில் நட்டு நிறைவான இலாபத்தை விவசாயத்தின் மூலம் மட்டுமே ஈட்டுவருகிறார். மேலும் நெல்லிலும் ஒற்றை நாற்று நடவு முறையிலும் அசத்தி வருகிறார்.

மேலும் கல்லூரி பேராசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும், விவசாயத் துறை அதிகாரிகளுக்கும் பாடம் நடத்தி சேவை செய்து வருகிறார். மேலும் அந்தப் பகுதியின் விவசாயிகளின் நண்பனாகவும் ( Farmer Friend ) அரசு நியமித்துள்ளது. மேலும் பல பரிசுகளையும், தினமலர் போன்ற பத்திரிக்கைகள் இவருக்கு " வாழ்நாள் சாதனையாளர் " பட்டத்தையும் அளித்துள்ளது.

மேலும் தொலைபேசி வாயிலாகவும் சேவை செய்து வருகிறார்.

இவர் போன்றவர்களால் " நம்மாழ்வார் " ஐயா அவர்கள் விதைத்த விதை இன்று மரமாக மாறி அனைவருக்கும் சேவை செய்து வருகிறது.

இந்த சாதனை மனிதருக்கு " வானகத்தின் ( நம்மாழ்வார் உயிர் சூழல் நடுவம் ) " மூலம் பாரட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment