இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் வானகம்

16 August 2014மனுடன் உருவாக்குறது தோப்பு , இயற்கை உருவாக்குறது காடு :
( இந்த மாத பண்ணைகள் பகுதியில் நாம் பார்க்கவிருக்கும் பகுதி )
 நன்றி : வானகம் இரண்டாம் மாத இதழ் ஜூலை - ஆகஸ்ட்
கட்டுரைகள் : ஜெ.கருப்பசாமி ( https://www.facebook.com/karuppa.samy.5283 )

தோப்பு வேண்டாம், வாங்க காடு வளர்ப்போம் ……
        இயற்கை வாழ்வியல் அறிஞர் நம்மாழ்வார் ஐயா அடிக்கடி பொது விவாதங்களில் கூறும் வார்த்தைஇந்த பாரஸ்ட் ஆபீஸருக்கு தோப்புக்கும், காட்டுக்கும் வித்தியாசம் தெரியாமா, இரண்டையுமே தோப்பு என்கிறார்.
           தோப்பு என்பது ஒரே ஒரு மர சாகுபடியை அதிகமாக உள்ளடக்கியது. அதாவது மாமரம் அதிகம் என்றால் அது மாந்தோப்பு “ , தென்னை மரமா இருந்த தென்னந்தோப்பு “, கொய்யா இருந்த கொய்யா தோப்பு “ , தேக்கு மரமாயிருந்த அது என்ன ????. தேக்கு தோப்பு தானே....
                காடு என்பது பல உயிர்சூழல்களை உள்ளடக்கியது. அதில் இயற்கையிலே பல வகையான பழமரங்கள் , வன மரங்கள், மூலிகை செடி, கொடிகள், கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிர்கள், கண்ணுக்குத் தெரிந்த ஊர்வன, பாலுட்டிகள், பறப்பன, நடப்பன என அதில் எண்ணிலடங்காதவைகளே அதிகம். இவையெல்லாம் உள்ள்டக்கியது தான் காடு “.

      ஆனா இந்த அரசு, ஃப்ராஸ்ட் ஆபீஸரு என்ன செய்யுர்ன்னா... வன ( காடு) விரிவாக்கம் என்ற பெயரில் மக்களுடைய வரிப்பணத்தில்
              முதலில் மலைகளிலுள்ள காடுகளை அழித்து  நாசம் விடுகின்றனர். ஏற்கனவே சொன்னது போல காடுகள் என்பது என்ன ? என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். இப்போது வனத்துறை அதிகாரிகள் காடுகளை முன்னரே சொன்னது போல வன விரிவாக்கம் என்கிற பெயரில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் தெரியுமா?
          கண்ணுக்கே தெரியா அளவில் உயர, உயரமாக வளர்ந்த பலவகையான மரங்கள் மற்றும் உயிர்சூழல்களை அழித்து, தேக்கு மரக்கன்று மட்டுமே நடுகிறார்கள் , சந்தன மரக்கன்று மட்டுமே நடுகிறார்கள் , புதுக்கோட்டை போன்ற பகுதிகளை அழித்த தைல மரங்களை மட்டுமே நடுகிறார்கள் , மேலும் சமூக நலக்காடுகள் என்கிற பெயரில் குளங்கள் மற்றும் பொது இடங்களில் கருவேல மரங்களை மட்டுமே நடுகிறார்கள். இது போன்ற ஓரின சாகுபடிகளை ( Mono Culture ) மட்டுமே செய்கின்றனர் செய்து  விட்டு, அதற்கு வன விரிவாக்கம்என்கிற பெயர் பலகை வைக்கின்றனர். இப்போது சொல்லுங்கள் அது வன விரிவாக்கமா அல்லது தோப்பு விரிவாக்கமா.? 
              இது தான் நம்முடைய மற்றும் வேளாண் பல்கலைக்கழகத்தின்  கல்விமுறை “. உண்மையான எதையும் நமக்கு கற்றுக் கொடுக்கவில்லை, மாறாக முன்னுக்குப் பின் முரணான கல்வியையே நம் மீது திணித்துள்ளனர்.
              இப்போது உங்களுக்கு வன விரிவாக்கதைப்பற்றி ஆழமாகத் தெரிந்து கொள்ள வேண்டியதன் அவசியம் என்னவெனில் , காடுகள் என்பது மனிதர்களாகிய நாமெல்லம் பூமியில் தோன்றுவதற்கு முன்னரே இருந்தது.
           அவற்றையெல்லாம் நாம் விதை விதைத்து , யூரியா, பொட்டாஷ், டிஐபி போன்ற இரசாயண உரங்கள் எல்லாம் இட்டும், எண்டோசல்பான், திமெட், மோனோ குரோட்டபாஸ்.. போன்ற விஷ பூச்சிக்கொல்லி நஞ்சுகளும், களைக்கொல்லி நஞ்சுகளும் தெளித்து வளர்க்கவில்லை. அவையெல்லாம் பறைவைகள் பழங்களை சாப்பிட்டு விட்டுப் பின், அதன் எச்சத்தில் வெளிவந்த கொட்டைகளாலும், கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிர்களாலும், ஊர்வன போன்ற பல்லுயிர்களாலும் தான் மிகப்பெரிய காடே உருவானது…….
          இந்த கருத்து விதைகளைத் தான் நம்மாழ்வார் ஐயா அவர்கள் தன் வாழ்நாளில் செல்லும் இடமெல்லாம் விதைத்துக் கொண்டே இருந்தார். அதன் பலனாக தான், உலகமெங்கும் இன்று அந்த கருத்து விதைகள் வளந்து பல, பல இயற்கை வேளாண் காடுகளை உருவாக்கியுள்ளது. அவற்றில் குறிப்பிடத்தக்கவைகள் சில உள்ளது. அதைப் பற்றிதான் இந்த பண்ணைப் பகுதியில் பார்க்க உள்ளோம்.
           
 மலர் இயற்கை வேளாண் பண்ணை ( மூடாக்கு முறை ):
            தமிழகமுழுவதிலும் “ நம்மாழ்வார் ஐயாவால் ” அடையாளம் படுத்தப்பட்ட 100 பயிற்சிப் பண்ணைகளில் ஒன்று தான் “ மலர் இயற்கை வேளாண் பண்ணை” .இந்த இயற்கை வேளாண் காட்டை உருவாக்கியவர் விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம், கிருஷ்ணபுரத்தை சேர்ந்தவர் மூடாக்கு முறை விவசாயி திரு. அய்யம்பெருமாள்ஐயா அவர்கள் . அய்யம்பெருமாள்ஐயா அவர்கள் கடந்த 17 வருடமாக விவசாயம் செய்து வருகிறார். அது சுமார் 7 ஏக்கர் பரப்பளவுடைய , உவர்மண் தன்மை கொண்ட நிலம். அதில் தென்னை, பனை , நாட்டு நெல்லி, சப்போட்டா, கொய்யா ,மா, வாழை, பப்பாளி மற்றும் அவருடைய வீட்டுக்குத் தேவையான நெல், காய்கறிகள் என  அவரே விளைவித்துக் கொள்கிறார். அவருடைய அனுவபத்தை கூறுகிறார் கேட்போம்.
         இயற்கைக்கு வழி வேளாண்மைக்கு மாறி கடந்த 5 வருடம் ஆகிறது. அதற்கு முன்னர் எல்லோரையும் விட அதிகமான அளவு இரசாயணத்தை தேடித் தேடி பயன்படுத்தினேன்.
         ஒரு கட்ட்த்தில் ன்னுடைய பணம் அனைத்தையும் இழந்து , விவசாய சாகுபடி முறையை மாற்றினால் என்ன ? என்ற எண்ணம் எனக்குள் உதித்து. ஏனெனில் எனக்கு எதையுமே ஆராய்ச்சி செய்து பார்க்க வேண்டும் என்கிற ஆர்வமுடையவன்.
        அந்த நேரத்தில் நம்மாழ்வார் ஐயாவின் கூட்டம் ஒன்றில் பங்கெடுக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அப்போது நம்மாழ்வார் ஐயா அவர்கள் கூறிய கருத்துக்கள் இன்னும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது “ .  காட்டுக்குள் உள்ள வன, பழ மரங்களைப் பாருங்க…. ஆற்றோரம் உள்ள வேப்பம் , தென்னை, புங்கன், பனை, ஆல, அரசு மரங்களைப் பாருங்கவீட்டு முற்றம், அரசு புறம்போக்கு நிலத்திலுள்ள மரங்கள பாருங்கஎன்ன தெரியுதுன்ன எங்களுக்குள் உள்ள அறிவு ஞானத்தை கேள்வி கேட்க வைத்தார்” ?..
                
அப்போ கூறினார். நிலம் என்னும் நல்லாள்னுபாரதிதாசன் எழுதினாரா..? அப்படினா...?
         பூமிக்கு பச்சைப் போர்வை ( பசுமை காடுகள்) முக்கியம்.  ஆனால் இன்று நம்முடைய பூமியில் காடுகள் எப்படி இல்லாமல் அம்பலமாக இருக்கிறதோ...  அது போலத் தான் உங்கள் நிலமாகிய தாய் மண்ணும் ” மூடாக்கு என்னும் போர்வை ” இல்லாமல் அம்பலமாக உள்ளது என்றார்.
         தாய்யை மற்றவர்கள் வருத்தினால், குழந்தைக்கு தாயால், எப்படி தாய்ப்பால் கொடுக்க முடியாதோ ...? அது போலத் தான் நிலமென்னும் தாய்யின் மீது, தாய்யை கற்பழித்து கொடுக்கக் கூடிய யூரியா, டிஐபி, ஃப்யூரடான், திமெட், எண்டோசல்பான், மனோகுரோட்டபாசு களைக்கொல்லி, மரபணு மாற்ற ( BT) பருத்தி, மக்காசோளனு விஷ நஞ்சுகளை தொடர்ந்து மூடை மூடையாக தெளித்து கெடுத்து விட்டோம். அதனால தாய் செத்துடா..... அதனால விளையல... அதனால காய்க்கலனு.. எங்களை” பாளார்.. பாளாருனு அறைந்த ” மாதிரி சொன்னார். 
         மேலும் காட்டுள எங்கு நாம கால் வைத்தாலும் நிலத்திலுள்ள இலை, தழைகள், குச்சிகளுனு மக்கும் கழிவுகளா... மூடாக்க்க இருப்பதையும், அதன் அடியில் கரையான் , அத உண்ண மண்புழு, அத உண்ண இன்னொரு உயிருனு,  மொத்த ” உணவு( உயிர்) சங்கிலி “ இருக்கு. அது செடி, மரங்களுக்குத் தேவையான தண்ணீரை சேமிக்குது... காத்துள உள்ள நைட்ரஜன் கொடுக்குது....
        அதெல்லாம் தான் மண்ணுக்கு ( தாய்க்கு) உணவு. ” இயற்கை அழித்த்தை திருப்பி அளிப்போம் “
             “ பூமி தாய் கழிவுகளைத் தான் நம்மட்ட கேட்குறா... ” இப்போ நாம் என்ன செய்யனும்னு கேட்டார்...
      அந்த வார்த்தைக்களுக்குப் பின் என்னுடைய பார்வை, செயல்பாடே மாறியது.  நான் தொழில் வேலையா. தமிழ்நாட்டின் பல இடங்களுக்கு செல்வேன். செல்லும் போது தான் நம்மாழ்வார் ஐயா சொன்ன ஒவ்வொரு விஷயங்களையும் ஆராய ஆரம்பித்தேன்.
           அன்றிலிருந்து என்னுடைய காட்டில் கழிவுகளுக்கு “ தீ வைக்கும் வேலையை ” நிறுத்தினேன். அந்தந்த மரத்திலிருந்து விழும் கழிவுகளை அங்கங்க.. அப்படியே விட்டுடேன். இரசாயண, பூச்சிக் கொல்லி, களைக்கொல்லி நஞ்சுகளை நிறுத்தினேன். என்ன நடக்குதுனு பார்க்க ஆரம்பித்தேன். முன்னவிட மரங்களுடைய வளர்ச்சியிலும், அதனுடைய இலை, தழைகளிலும் பெரிய வித்தியாசம் தெரியு ஆரம்பித்தது..  
        அப்ப முடிவு பண்ணினேன். நாம சரியான திசையை அடையாளம் கண்டுட்டோம்னு ஒரே சந்தோஷம். .
உழவு முறை :

      ஐயா அடிக்கடி “ உழவில்லா வேளாண்மை தான் “ நமது இறுதி இலக்கு என்பார். அதைக் கேட்டதிலிருந்து “ நானும் அதை செய்யனும் “முடிவு எடுத்தேன்.  அன்றிலிருந்து இனி, நானும் எனக்குப் பிறகு என்னுடைய மகன் முதல் என்னுடைய வம்சமே வரை கூட,  உழவடிக்கக் கூடாது “ உறுதியா “ இருக்கோம். அதன் பலனாக ,

காண்டாமிருக வண்டு, யூரி எப்பெக்ட் ( வைரஸ் நோய்) .....  எளிய தீர்வு :
             உழவு அடிப்பதை நிறுத்தும்வரை குறிப்பாக நிறைய தென்னை மரங்களில் அடிக்கடி வைரஸ் நோய் ( யூரிஎப்பெக்ட் ), காண்டாமிருக வண்டு என பல நெருக்கடிகளை சந்தித்துக் கொண்டே இருந்தேன். அதற்கு  நிறைய இரசாயணங்களையும், பூச்சிக்கொல்லிகளையும் பயன்படுத்தியும் தென்னை மரங்களை காப்பாற்ற முடியவில்லை.
              நிறைய அக்ரிகல்சர் ஆபீஸர் சொன்னாங்க, சாறு வடியும் இடத்தில் ஓட்டை போட்டு குச்சியால வண்ண்டை கொன்னுட்டு அங்க மாத்திரை வைக்கனும். அப்போ அது செத்து போயிடும், மரத்தை காப்பாத்தலாம்ணு சொன்னாங்க. நானும் நிறைய மாத்திரையை பயன்படுத்திப் பார்த்தேன், மரத்தையும் காப்பத்த முடியல, என்னுடைய பையில இருக்க பணத்தையும் காப்பத்த முடியல.
         “ ஆத்தோரம் இருக்கிற தென்னைமரத்தப் பாருங்கனு ஐயா சொன்ன வார்த்தை மட்டுமே  எனக்குள் ஒலித்துக் கொண்டே இருந்தது “ . அன்றிலிருந்து நான் அந்த தென்னை மரங்களையெல்லாம் பார்க்க ஆரம்பித்தேன்.  சில மாதங்களுக்குள் என்னுடைய தென்னை மரத்தில் அந்த பிரச்சனைகளெல்லாம் சரியாகி விட்டது.
       இது எப்படி என்று யோசிக்கும் போது, ஒரு சிறு சம்பம், நான் பல கூட்டங்களுக்கு செல்வது வழக்கம், ஏனெனில் நம்முடைய தேடலுக்கு ஏதாவது விடை கிடைக்கும் என்கிற நம்பிக்கை .அப்போது ஒருவர் கூறியது “ நம்முடைய உடலில் பல நரம்புகள் உள்ளது. அதில் ஏதாவது, ஒரு நரம்பை வெட்டி விட்டாலும் நம்முடைய உடலில் பல வியாதிகள் வந்து அது நமக்கு ” பக்க விளைவுகளை ” ஏற்படுத்தி உயிரையே பலி வாங்கிவிடும் என்றார். “
    
     அந்த கருத்தை நம்முடைய தென்னை மரத்திற்கும் பொருந்தோமோ, என்கிற எண்ணம் எனக்குள். எனவே அந்தக் கருத்தை பொருத்தும் போது, காட்டில் உளவி செய்யும் போது மரத்தின் பக்கவாட்டில் செல்லும் வேர்களான தென்னை, முருங்கை.... மற்றும் ஆழத்தில் செல்லும் வேர்களும் கூட அறுந்து விடுகிறது. தென்னை மரத்தில் ” வண்டு செல்லக்கூடிய பாதை ” இது தான் என்று தீர்மானிக்கும் போது ஐயா சொன்னது மறுபடியும் நினைவுக்கு வர “ ஆத்தோரம் இருக்கும் தென்னைக்கு யார் உழவு செய்கிறார்கள், அதுக்கு நோயே வரவில்லை “ என்ற கருத்தின் ஆழம் புரிந்தது. எனவே,  காண்டமிருக வண்டு மட்டுமல்ல எல்லா வைரஸ் நோய்களுக்கும் காரணம் ” உழவு தான் “.
         அன்றிலிருந்து தீர்மானித்து விட்டேன். எப்படி விவசாயத்திற்கு முதல் எதிரி “ தீப்பட்டியோ “ அதுபோல , “ காட்டிற்கு உழவு “ இரண்டாம் எதிரி.
தண்ணீர் பாசன முறை :
            முன்னெல்லாம் அடிக்கடி தண்ணீர் விட காட்டுக்கு செல்லனும். வேலை அதிகமா. இருந்தா சம்பளத்துக்கு ஆள்விடுவேன். ஆனா கழிவுகளை அங்கங்க.. அப்படியே விட ஆரம்பித்த்திலிருந்து தண்ணீர் பயன்பாடு ... முற்றிலும் குறைந்த் போயிடுச்சு..
          முன்னெல்லாம் ஆன ஆறுமாசத்துக்கூட தண்ணீர் காணாது. இயற்கை வழிக்கு மாறிய ஆரம்பத்திலிருந்த வருடம் முழுவதும், கோடையில் கூட கிணற்றில் தண்ணீர் இருந்து கொண்டே இருக்கும்.மேலும் நிலத்தை விட்டு மழைநீர் வெளியே ஓடிவிடாமலிருக்க கரைகள் மட்டும் அமைத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

களையெடுக்கயேடுக்க்க் கூடாது :
               களையெடுக்க  அதிக செலவும் , நேரமும் , உழைப்பும் வீணானது. ஆனால் மற்ற விவசாயிகளை விட எனக்கு களையின் பாதிப்பு குறைவு, காரணம் ” மூடாக்கு முறையை”  பயன் படுத்தியது.
         ” நம்மாழ்வார் ஐயா ” சொன்ன மாற்றங்களை ஓரளவு  கடைபிடிக்க ஆரம்பித்தவுடனே கிடைத்த மாற்றத்தை அனுபவித்தப் பிறகு, எனக்குள் மேலும் ஆர்வம் அதிகரித்து.  ஐயா சொன்ன முழுவதையும் கடைபிடித்தால் என்ன நடக்கும் என்று பார்ப்போம் ? என செயல்பட ஆரம்பித்தேன்.
              மறுபடியும் ஐயா சொன்னது “ காடுகளில் யார் களையெடுக்கிறார்கள் “ . காட்டின் விளைச்சலைப் பார்த்தீர்களானால் தெரியும்.
           அன்றிலிருந்து ” காட்டில் களையெடுப்பதையும் நிறுத்தி விட்டேன். இப்போது என்னுடைய காட்டில் ஒரு ஆள் உயரத்திற்கு கோரைப் புற்கள் மற்றும் பல விதமான களைகள் வளர்ந்து கிடக்கின்றன.
களையின் அற்புதம் :
       களைச்செடிகள் என நாம் சொல்லும் கோரை, கொளுஞ்சி, அவுரி, துத்தி, நாயுவி, ஆவாரை, எருக்கு, நெய்வேலி காட்டமணக்கு போன்ற அனைத்தும் நிலத்தை வளப்படுத்தக்கூடியது என சொன்னால் நம்மப மாட்டீர்கள். என்னுடைய காட்டை பார்த்தப் பின் சொல்லுங்கள். இந்த செடிகள் எல்லாம் மண்ணிலுள்ள உப்புத்தன்மையை மாற்றி , மண்ணின் உவர் தன்மையையும் மாற்றுகிறது. இதனால் உவர்மண்ணாக இருந்த என் காடு இப்போது எங்கு பார்த்தலும் ” வண்டல் மண் “ காடாக மாறியுள்ளது.

தண்ணீரே தேவையில்லை :
              இந்த களையால் முக்கியமான நன்மை என்னவென்றால், இது ” பூமிக்கு மூடாக்காக ” செயல்படுகிறது. இதனால் ஐயா சொன்னது போல் , நாம் பாய்ச்சும் நீர் சூரிய ஒளியாலும் , காற்றலும் ஆவியாகது. மூடாக்கால் எப்போதும் நிலம் ஈரத்தன்மையுடன் காணப்படுகிறது. இதனால் அசோஸ்பாக்டீரியா, பாஸ்போபாக்டீரியா, சூடோமேனாஸ் மட்டுமல்ல கணக்கில் எண்ணிலங்காத, ஆய்வகத்தாலும் கண்டுபிடிக்க முடியாத பல கோடி நுண்ணுயிர்கள் பெருக்கம்அடைந்துள்ளது.
            இதில் குறிப்பிடப் பட வேண்டிய அம்சம் என்னவென்றால், என்னுடைய காட்டில் இப்போது நான் ” தண்ணீர் விட வேண்டிய அவசியமில்லை “. காரணம் இந்த ”களைசெடிகள் நிலத்தை மெத்தை “ போல் வைத்துள்ளது. அப்போது அப்போது பெய்யும் மழை நீர் கூட காட்டை விட்டு வெளியே செல்லாமல், அங்காங்கே சேமிக்கப் படுகிறது. அதனால் என்னுடைய காட்டில் தண்ணீர் பாய்ச்ச தேவையில்லை. நம்ப முடியவில்லையா ... ?
               அதிலும் அதிசயத்தக்கது, இந்த களைசெடியான கோரைப்புல்லானது “ காற்றிலுள்ள நீரை சேமிக்கிறது “ .  நீங்களும் கவனித்துப் பாருங்கள், கோடையில் கூட அதிகாலை வேளையில் புல்லில் நீர் தன்மை அதிகமாக இருக்கும்.
இதனால் தான் என்னுடைய காட்டிற்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டியதன் தேவை குறைகிறது.    
18 நாளுக்கு ஒரு முறை ஒரு தென்னம்பாளை :
                 இந்த காடு வளர்ப்பு முறையால் என்னுடைய பகுதியில் என் தோட்ட்த்தில் மட்டும்
18 நாளுக்கு ஒரு முறை ஒரு தென்னம்பாளை வெட்டுகிறேன்.
பாம்பு நட மாட்டம் :
          பாம்பு நடமாட்டம் பற்றி உங்கள் மனதில் கேள்வி எழுகிறதாஇங்கு நாம் செய்யும் விவசாய முறைகாடு வளர்ப்பு முறைதானே. அப்புறம் என்ன ? எப்படி பாம்பு வருகிறதோ ? அதுபோல அதை உணவாக உட்கொள்ள மயில், கீரி போன்ற ஒட்டும் மொத்த உணவுசங்கிலியும் அதைப் பார்த்துக் கொள்ளும். மேலும் பாம்பு இருப்பதால் அங்காங்கு பொந்துகளை உருவாக்குவதால் வேருக்கு காற்றோட்டம் கிடைக்கிறது.
          பாம்புகளுடன் நான் நண்பராகி விட்டேன். அதானல் செருப்பு கூட அணிவதில்லை. எப்போதுமே. நீங்களும் தயாரா என தன்னமிக்கையுடன் கேட்கிறேன், உங்களிடம்…. ?
எவ்வளவு பணம் சம்பாதிக்கிறேன், எனக் கேட்கிறீர்களா ?
1.     நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள். நான் இங்கு, உங்களைப்போல் உழவுஅடிக்கவில்லை, இரசாயண உரமிடவில்லை, நஞ்சு தெளிப்பதில்லை, களையெடுக்கவில்லை, நீர் பாய்ச்ச சொட்டு நீர் போன்ற கருவிகள் பயன்படுத்தவில்லை, மின்சாரமும் செலவு குறைவு, என எந்த வேலையும் செய்யவில்லை. ( Do nothing Forming)
2.    ஐயா ஒருமுறை சொன்னார் விவாசாயத்தில் லாபம் வராது. வியாபாரத்தில் தான் லாபம் வரும் என்றார். எனவே விவசாயி தான் விளைவித்தப் பொருளை தானே வியாபாரம் செய்ய கற்றுக் கொள்ளவேண்டும்.
            உதாரணமாக,
1.    விவசாயி முதல் முறை தென்னை விளைச்சலை நேரடியாக விற்க வேண்டும்.
2.     அடுத்த முறை அதை தேங்காய விற்க வேண்டும். அப்போது தென்னையின் கழிவுகளை , காட்டிலே மூடாக்காக போட வேண்டும்.
3.    அடுத்த முறை அதை தேங்காய் எண்ணையாக மாற்றிவிட்டு, பின்னாக்கையும் வயலில் போட்டு விடவேண்டும்.
4.    அடுத்த முறை அந்த தேங்காய் எண்ணையில் பலகாரம் செய்து விற்க வேண்டும் என்பார்.
3.    அது போல நானும் தேங்காய் எண்ணெயாக விற்கிறேன். அது 1கிலோ ரூ.145வரை தேங்காயின் விலைக்கு ஏற்ப கொடுக்கிறேன்.
4.    மன நிறைவாக , நோய்யில்லாமல் ஆரோக்கியமாக வாழ்கிறோம். எங்களுடைய குழந்தைகளுக்கும் ஆரோக்கியாமான காற்று, உணவு மற்றும் நிலத்தை கொடுக்கிறேன். எந்த கவலையும் விவசாயத்தில் இல்லை.  
மானாவாரியிலும் செய்யலாம் :
     இது போன்ற முறைகளை மானவாரி நிலத்திலும் செய்ய முடியும் என்கிற நம்பிக்கையுடன், 100 ஏக்கர் காட்டை பராமரிக்க ஒரு நபரே போதும் எனவும், தேவைப்படும் போது மட்டுமே ஆட்களைபயன்படுத்திக் கொள்ளலாம், அதுவும் காய் மற்றும் கனிகள் பறிக்க மட்டும் தான்.

இவருடைய பண்ணையைவானகம்சிறந்த 100 பயிற்சி பண்ணைகளில் ஒன்றாக தேர்வு செய்து தொடர்ந்து பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்துவருகிறது.
தொடர்புக்கு :
அய்யம்பெருமாள், மலர் இயற்கை வேளாண் பண்ணை,
இராஜபாளையம், விருது நகர் மாவட்டம். கைபேசி எண் : 9486321090.

வானகம் மாத இதழைப் பெற கீழ் கொடுக்கப்பட்டுள்ள எளிய விண்ணப்பப் படிவத்தை நிரப்பி முன்பதிவு செய்யவும்.

https://docs.google.com/forms/d/16N10FGYRn5WD3b1mod_Yyjfp8jeb0BwxLSxitXxsutk/viewform

இதழுக்கான நன்கொடையை வங்கி அல்லது மணிஆர்டர் முறையில் செலுத்தலாம்.

நன்கொடை செலுத்த வேண்டிய வங்கி கணக்கு எண் :
A/c Name : J.karuppasamy
A/c No. : 008501000030808
Bank Name : Indian Overseas Bank , Sivakasi.
IFSC Code : IOBA0000085

அல்லது

நன்கொடை செலுத்த வேண்டிய மணி ஆர்டர் முகவரி :
ஜெ. கருப்பசாமி ,
த/பெயர் : த.ஜெயராஜ்,
990, பெரிய கருப்பன் ரோடு, சிவகாசி – 626 189. விருதுநகர் மாவட்டம்.

மாத இதழைப் பெறுவதற்கு முன்பதிவு செய்ய :
’’சிற்பி ‘’ வாழ்வியல் மையம்,
வானகம் ஒருங்கிணைப்பாளர்,
226, விநாயகர் காலனி,
சாட்சியாபுரம், சிவகாசி -626124.
தொடர்புக்கு : 9443575431, 9843127804,
Email : vanagamnammalvarfoundation@gmail.com


1 comment: