இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் வானகம்

24 February 2012

வானகம்- ஒரு அறிமுகம்

                                 "உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
                                   தொழுதுண்டு பின்செல் பவர்"
" வானகம்  " என்ற இந்த தன்னார்வ மாதிரி பண்ணை  இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் வழிகாட்டுதலின் பேரில் இயற்கை விவசாயத்தின் இணையில்லா மகத்துவத்தை உலகிற்கு உணர்த்துவதற்காக தொடங்கப்பட்டது.சுமார் 55 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கும் இந்த பண்ணை மூன்று வருடங்களுக்கு முன்பு வரை  பாறை பூமியாய் தண்ணீர் வளமின்றி வறண்ட பிரதேசமாக இருந்துவந்துள்ளது.ஆனால் இயற்கை வழி விவசாய முறை இந்த பாறை நிலத்தை பல்லுயிர் வாழும் பெரும் கானகமாக மாற்றியுள்ளது.இயற்கை நமக்கு அளிக்கும் எல்லையில்லா வளத்தை சரியான முறையில் சேமித்தால் விளையும் அற்புத மாற்றங்களை நம் கண் முன்னே விளக்கி காட்டுகிறது இந்த வானகம்.
           
  "இயற்கை அளித்ததை திருப்பி அளிப்போம்"என்ற விதியின் செயலாக்கத்தை இந்த வானகத்தின் பெரும்பகுதியில் காணலாம்.ஆவிற்கும் மாந்தர்க்கும் தொன்றுதொட்டு இருக்கும் பிணைப்பிற்கு தற்கால உதாரணம் இந்த பண்ணை. வாருங்கள் நண்பர்களே,வானகத்தின் வழி இயற்கை விவசாயத்தின் பெரும்பாதையில் பயணிப்போம். 


மேலும் வானகம் பற்றிய பல தகவல்களை  கீழ்க்கண்ட இந்த facebook இணைப்பில் அறியலாம்  https://www.facebook.com/pages/Nammalvar-Ecological-Foundation/218658421556123 



No comments:

Post a Comment